July 6, 2012

ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டி


அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லஹ் ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணம் செல்பவர்களுக்காக ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டி தமிழில் PDF வடிவில் உள்ளது கீழே உள்ள லிங்கை சொடுக்கி தரவிறக்கம் செய்து பயன் பெறவும்                                                                                                                              

http://www.4shared.com/office/IkMgT0g0/Haj__Umra_Guide.html?refurl=d1url

May 17, 2012

மைசூர் அரண்மனை

நாங்கள் குடும்பத்தோடு மைசூருக்கு சுற்றுலா சென்றோம்! பார்க்க பல
இடங்கள் இருந்தாலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒன்றான
மைசூர் பேலஸ்( Mysore Palace )ம் ஒன்று! நாங்கள் நேரில் கண்டு ரசித்த இவ்விடத்தை நீங்களும் சென்று பாருங்கள்! நேரில் செல்ல முடியாதவர்கள் ஆன்லைனில் சுற்றிப்பார்க்க இங்கே செல்லவும்(www.mysorepalace.tv). 360 டிகிரி பார்க்கும் வசதி, ஆங்கில வர்ணனை, போட்டோ கேலரி என எளிதாக பார்க்க முடிகின்றது.  செலவில்லாமல் மைசூர் அரண்மனையை சுற்றிப்பாருங்கள்..                                                              
http://www.mysorepalace.tv/360_Eng/index.html

April 20, 2012

கொலுசு ஒலி ......


(அன்பு வஹாப்)     டீக்கடை பெஞ்சில்_     கையில்(ஓசியில் படிக்கும்) மாலை   நேர செய்தித்தாள்     சுற்றி   (வெட்டி) நண்பர்களின்      அரட்டையாய்.....      பனிக்காற்று மெல்ல என்னை வருடி...     எள்ளி நகையாட....    கொலுசு ஒலி கேட்க      தலைநிமிர்ந்தேன்     என் முன்னாள் காதலி...  தன் கணவனோடு கைகோர்த்து...நடந்து சென்றாள்... என் மனதில்...  இதயத்தில் வலி எடுக்க.......

April 6, 2012

என் பள்ளிப் பருவம்.....

என் பள்ளிப் பருவம்...... அது ஒரு கனாக் காலம்தான்! இனி கனவிலும் நிகலாக்காலம்! பள்ளி வகுப்பறையும் பச்சை மரங்களும் இன்றும் பசுமையான நினைவுகளோடு என் நெஞ்சில் புதைந்து கிடக்கின்றன! பதினைந்து வருடங்கள் கழிந்தும் இன்றும் கண்கள் குளமாகின்றன.... பள்ளி கட்டிடங்களையும், உடன் படித்த நண்பர்களையும் பார்க்கும் போது..... நாங்கள் அரசாண்ட அரண்மனையாய் பள்ளிக்கூடம், அதில் மன்னர்களாய் நாங்கள்! மக்களாய் இன்பம் மட்டுமே! சின்ன சின்ன சேட்டைகள், ஆசிரியரின் கோபங்கள், முட்டிங்கால் தண்டனை, மழைக்கால பள்ளி நாட்கள், பாதம் மர நிழலில் மதிய உணவு, மாலை நேர கிரிக்கெட், வெள்ளிக்கிழமை ஜும்மா! சனிக்கிழமை சக்திமான்! ஞாயிறு விளையாட்டு, மீண்டும் சோர்வோடு திங்கள்கிழமை பள்ளிக்கூடம், தோழனின் அன்பு கோபம்.... தேளில் கைபோட்டுக்கொண்டு ஊர் சுற்றியது, அம்மாவின் பாசம், அத்தாவின் அறிவுரை, ஆற்றில் நீச்சல், சத்தம் போட்டு படித்தல், பரீட்சை நேர பதட்டம், தோழியின் அக்கறை, தேர்வில்.... ஹய்யா....... பாஸ்!!! கோடை விடுமுறை, இது போல அளவில்லா சந்தோஷங்கள்!..... என்ன தவம் செய்தாலும் மீண்டும் கிடைக்காத பேரின்பம் அது! அப்பேரின்பம், இன்று எழுதப்படாத வரலாறாய், காலம் தீட்டிய ஓவியமாய், ''நினைவுகளில்'' மட்டுமே!!!............