April 6, 2012
என் பள்ளிப் பருவம்.....
என் பள்ளிப் பருவம்......
அது ஒரு கனாக் காலம்தான்!
இனி கனவிலும் நிகலாக்காலம்!
பள்ளி வகுப்பறையும் பச்சை மரங்களும்
இன்றும் பசுமையான நினைவுகளோடு
என் நெஞ்சில் புதைந்து கிடக்கின்றன!
பதினைந்து வருடங்கள் கழிந்தும்
இன்றும் கண்கள் குளமாகின்றன....
பள்ளி கட்டிடங்களையும்,
உடன் படித்த நண்பர்களையும் பார்க்கும் போது.....
நாங்கள் அரசாண்ட அரண்மனையாய் பள்ளிக்கூடம்,
அதில் மன்னர்களாய் நாங்கள்!
மக்களாய் இன்பம் மட்டுமே!
சின்ன சின்ன சேட்டைகள்,
ஆசிரியரின் கோபங்கள்,
முட்டிங்கால் தண்டனை,
மழைக்கால பள்ளி நாட்கள்,
பாதம் மர நிழலில் மதிய உணவு,
மாலை நேர கிரிக்கெட்,
வெள்ளிக்கிழமை ஜும்மா!
சனிக்கிழமை சக்திமான்!
ஞாயிறு விளையாட்டு,
மீண்டும் சோர்வோடு திங்கள்கிழமை பள்ளிக்கூடம்,
தோழனின் அன்பு கோபம்....
தேளில் கைபோட்டுக்கொண்டு ஊர் சுற்றியது,
அம்மாவின் பாசம்,
அத்தாவின் அறிவுரை,
ஆற்றில் நீச்சல்,
சத்தம் போட்டு படித்தல்,
பரீட்சை நேர பதட்டம்,
தோழியின் அக்கறை,
தேர்வில்.... ஹய்யா....... பாஸ்!!!
கோடை விடுமுறை,
இது போல அளவில்லா சந்தோஷங்கள்!.....
என்ன தவம் செய்தாலும்
மீண்டும் கிடைக்காத பேரின்பம் அது!
அப்பேரின்பம், இன்று
எழுதப்படாத வரலாறாய்,
காலம் தீட்டிய ஓவியமாய்,
''நினைவுகளில்'' மட்டுமே!!!............
Subscribe to:
Post Comments (Atom)
super yaaa arumai!
ReplyDelete